பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் மகேந்திரன் என்பவர்போட்டியிடுகிறார். அவர் இன்று வால்பாறை பகுதியில் உள்ள அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வால்பாறையில் ஐந்து கோடி ரூபாய்செலவில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்க பணிகள் நடைபெற்றுவருகிறது.மேலும் சிறுவாணி ஆற்றங்கரையோரத்தில் வசித்துவரும் மக்களுக்கு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் வால்பாறை பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.