கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் அணைக்குள்பட்ட பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்திலிருந்து பாசனத்திற்காக பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக விளை நிலங்கள் உள்ளன. இந்தாண்டுக்கான முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் முதலமைச்சரிடம் கோரிக்கைவைத்தனர். அதன்படி இன்று பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன் புதூர் கால்வாய், சேத்துமடை கால்வாய், ஆழியாறு ஊட்டுக்கால்வாய் ஆகிய கால்வாய்களை ஆழியார் அணையில் உள்ள கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
அதையடுத்து திறக்கப்பட்ட பாசன தண்ணீர் கால்வாய் வழியாக வந்தபோது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, விவசாயிகள் மலர்த்தூவி வரவேற்றனர்.
மொத்தம் 22 ஆயிரம் 332 ஏக்கர் பாசன பரப்புள்ள நிலத்திற்கு 135 நாள்கள் இடைவெளிவிட்டு 70 நாள்களுக்கு மொத்தம் இரண்டாயிரத்து 250 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளன. ஆழியார் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: முதல் போக பாசன வசதிக்காக மஞ்சளாறு அணையிலிருந்து நீர் திறப்பு!