ETV Bharat / state

சர்ச் வாசலில் போட்டிப்போட்டு அதிமுக - திமுக துண்டு பிரசுரம்! - Dmk

கோவை: சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் போட்டிப்போட்டு பரப்புரை செய்து வருகின்றனர்.

party campaign
author img

By

Published : May 12, 2019, 7:05 PM IST

கோவை மாவட்டம் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவினர் இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும், திமுகவினர் ஆட்சியை கைப்பற்றும் நோக்கிலும் தொகுதிகளில் களப்பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதால், அவர்களுக்கு இணையாக திமுகவினரும் அப்பகுதியில் போட்டிப்போட்டு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்ச் வாசலில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்த அரசியல் கட்சியினர்

அதன்படி சூலூர் தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கிறித்துவர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். அப்போது, பிரார்த்தனை முடிந்து வெளியே வந்த கிறிஸ்த்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் காமராஜ் தலைமையிலும், திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து வேப்பனஹள்ளி சட்டப்பேரவை உறுப்பினர் முருகன் தலைமையிலான திமுகவினரும் போட்டிப்போட்டு துண்டு பிரசுரங்களை அளித்தனர்.

சு.சீனிவாசன்.         கோவை

சூலூரில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பிரச்சாரம்.

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.அதற்காக அரசியல் கட்சி தலைவர் கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக-வினர் இடைத்தேர்தல்களில் ஜெயித்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும்,திமுக-வினர் ஆட்சியை கைப்பற்றுவதிலும் விதமாக இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் களப்பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் சூலூர் சட்டமன்றத்தொகுதி அதிமுக-வின் கோட்டை என்பதால் திமுக-வினருடன் போட்டி போட்டு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கிறித்துவர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.பிரார்த்தனை முடிந்து வெளியே வரும் கிறிஸ்த்தவர்களிடம் அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ்  தலைமையில் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்தும்,திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் தலைமையிலான திமுக-வினரும் இன்று போட்டி போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.