ஊரடங்கு உத்தரவு கடந்த ஒரு மாத காலமாக நடைமுறையில் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு உத்திரவின்படி வருவாய் துறையினர், தன்னார்வலர்கள், சமூக அமைப்புகள் என பல துறையைச் சேர்ந்த அலுவலர்கள் அனுமதி பெற்று சாலையோரம் வசிக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், வடமாநிலத்தவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட எஸ்.பி உத்திரவின்படி காவல் துறையினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தும் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வைரம் தலைமையில் சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்கள், ஆதரவற்றவர்களுக்கு பழ வகைகள் அளித்து கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் எஸ்ஐ கார்த்திக்குமார், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: வன விலங்குகளை சமைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞர்கள் கைது