ETV Bharat / state

ஒரேநாளில் 1300கிலோ ரேஷன் அரிசி கடத்தல்! - police arrest rice pollachi

கோவை: பொள்ளாச்சி அருகே ஒரேநாளில் 1300 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி செய்திகள்
பொள்ளாச்சி செய்திகள்
author img

By

Published : Jul 24, 2020, 5:41 PM IST

பொள்ளாச்சி அருகே உள்ள கேரளா எல்லையான நடுப்புணி, கோபாலபுரம், மீனாட்சிபுரம், கோவிந்தபுரம் வழியாக இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் மூலம் தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அத்தகவலின் அடிப்படையில் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் ஆலோசனைப்படி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வைரம் தலைமையில் கார்த்தி மற்றும் காவல் துறையினர் தனிப்படை அமைத்து குஞ்சுபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்துல் ஜாபரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கேரளாவுக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர் வைத்திருந்த 250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டபோது, மாருதி காரில் வந்த பாருக், மணிவண்ணாமலை பகுதியை ஒருவர் என மொத்தம் மூன்று பேர் 800 கிலோ ரேஷன் அரிசியை விற்க முயன்றுள்ளனர்.

இதனையடுத்து அரிசியைப் பறிமுதல் செய்து, அவர்கள் மூவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இந்த கடத்தலுக்கு உறுதுணையாக கேரளாவைச் சேர்ந்த அலாம், அமான் இருப்பதுதெரியவந்தது. பிறகு காவல் துறையினர் அவர்கள் வைத்திருந்த வாகனங்களைப் பறிமுதல் செய்து தலைமறைவான குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

இதேபோல் ஆனைமலை பகுதியில் ரேஷன் அரிசியை இருசக்கர வாகனத்தில் கடத்த முயன்ற ரபீக், நஜிமுதீன், முகம்மது ரசூல், தமிழ் செல்வன் ஆகியோரை கைது செய்து அவர்களது வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதற்கு உறுதுணையாக இருந்த அப்பாஸ்ஸை தேடி வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் கோவை மாவட்டம் குடிமைப்பொருள் கடத்தல் பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் ஒரேநாளில் 1300கிலோ ரேஷன் அரிசி பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.