ETV Bharat / state

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கிய காவல் ஆய்வாளர்! - மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சி

கோயம்புத்தூர்: மருத்துவப் படிப்பில் தேர்ச்சிபெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிக்கு கிணத்துக்கடவு காவல் ஆய்வாளர் முரளி பாராட்டி கல்வி உதவித்தொகை வழங்கினார்.

police
police
author img

By

Published : Dec 5, 2020, 6:58 AM IST

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி நீட் தேர்வில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த மாணவன் அன்பரசன் 235 மதிப்பெண்களும், முத்தூரைச் சேர்ந்த மாணவி புனித தனுஷ்யா 208 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

இருவரும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மாணவன் அன்பரசன், மாணவி புனித தனுஷ்யா ஆகியோருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைத்துள்ளது. அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பு படிக்க இடம் கிடைத்துள்ளதால் மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், கிணத்துக்கடவு காவல் ஆய்வாளர் முரளி இருவரது வீட்டிற்குச் சென்று சால்வை அணிவித்து ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி பாராட்டினார்.

இதையும் படிங்க: கோயில் காளை உயிரிழப்பு - ஆட்டம் பாட்டத்துடன் இறுதி அஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.