கோவை காந்திபார்க்கில் குமாரசாமி ஏரி பகுதி பூசாரிபாளையம், உக்கடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை நகரத்தை விட்டு அப்புறப்படுத்தும்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் 150க்கும் மேற்பட்டோர் காவல் துறை விதித்த தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உட்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனும் கலந்து கொண்டார்.
இது குறித்து நடராஜன் கூறுகையில், "கிட்டத்தட்ட 100 ஆண்டு காலமாக இப்பகுதியில் வசித்து வரும் மக்களை ஸ்மார்ட் சிட்டி என்று கூறி 20 கிலோ மீட்டர் தாண்டி உள்ள மலுமிச்சம்பட்டி, கிணத்துக்கடவு பகுதிக்கு இடம்பெயரக் கோரி இம்மக்களை அப்புறப்படுவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வாறு செய்தால் இப்பகுதியில் வசிப்போரின் குழந்தைகளுக்கான கல்வி பாதிக்கப்படும். மாற்று இடம் கொடுத்தால் நகரத்திற்கு உள்ளாகவே வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.