ETV Bharat / state

கோவையில் பேட்டரி திருட்டு கும்பல் கைது! - பேட்டரி திருடர்கள்

கோவை: பொள்ளச்சியில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் லாரிகளில் பேட்டரி திருடிவந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

பிடிபட்ட பேட்டரி திருடர்கள் - நான்கு பேர் கைது!
author img

By

Published : Jul 24, 2019, 10:53 AM IST

கோவை மாவட்டம் பொள்ளச்சியில் சில நாட்களாக இரவு நேரங்களில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் லாரிகளில் பேட்டரிகளை மட்டும் குறிவைத்து அடையாளம் தெரியாத கும்பல் திருடிவருவதாக லாரி ஓட்டுநர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தனிப்படை காவல் துறையினர் திருடர்களை தேடிவந்தனர்.

பிடிபட்ட பேட்டரி திருடர்கள் - நான்கு பேர் கைது

இந்நிலையில், ஊஞ்சபேலம்பட்டி பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கேரளா எண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அந்தக் காரில் லாரி பேட்டரிகள் இருந்துள்ளன. பின்னர் காரை ஓட்டிவந்த சஜித், சதீஷ்குமார், விக்னேஷ், மதன் உள்ளிட்ட நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரித்தபோது, கல்லூரி கால நண்பர்களான இவர்கள் நான்கு பேரும் கூட்டாக பல இடங்களில் பேட்டரிகளை திருடி விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

பின்னர் இவர்களிடமிருந்து 37 பேட்டரிகள், மூன்று சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Intro:batteryBody:battreyConclusion:பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் லாரிகளில் பேட்டரி திருடிய 4 பேர் கைது 3 கார்கள் 37 பேட்ரிகள் பறிமுதல்

பொள்ளாச்சி - ஜூலை- 23

பொள்ளாச்சி ஆனைமலை, ஆழியார் பொள்ளாச்சி கிழக்கு, மேற்கு , மகாலிங்கபுரம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரிகளில் பேட்டரிகளை மட்டும் குறிவைத்து மர்ம கும்பல் கொள்ளையடித்து வந்தன நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் பேட்டரிகள் தொடர்ந்து திருடப்பட்டு வந்ததால் லாரி ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தன இதுகுறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர் இன்று அதிகாலை ஊஞ்சபேலம்பட்டி பகுதியில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த கேரளா என் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்ட போது அந்தக் காரில் பேட்டரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் காரை ஓட்டி வந்த பசியா புரத்தை சேர்ந்த சஜித் பொள்ளாச்சியை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் விக்னேஷ் மதன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது இவர்கள் நான்கு பேரும் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களாக இருந்துள்ளனர் கூட்டாக பல இடங்களில் பேட்டரிகளை திருடி விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர் பின்னர் இவர்களை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 37 பேட்டரிகள் மற்றும் மூன்று சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் ஏற்கனவே இந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.