ETV Bharat / state

ஏரியாவில் யார் டான்? - இளைஞரை வெட்டி விட்டு தப்பி சென்றவர்கள் கைது - யார் டான் என்பதில் தகராறு

கோயம்புத்தூரில் ஏரியாவில் யார் டான் என்பது தொடர்பான முன் விரோதத்தில் இளைஞர் ஒருவரை வெட்டி விட்டு தப்பிச் சென்ற கும்பலை காவல் துறையினர் சிசிடிவி காட்சி உதவியுடன் கைது செய்தனர்.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்
author img

By

Published : Mar 25, 2022, 10:44 AM IST

கோயம்புத்தூர்: ரத்தினபுரி கண்ணப்பநகரை சேர்ந்தவர் காட்சன். இவரை முன் விரோதம் காரணமாக மார்ச் 23ஆம் தேதி இரவு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனிடையே படுகாயமடைந்த காட்சனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை மீட்டு விசாரணையை தொடங்கினர்.

குற்றவாளிகள் கைது
குற்றவாளிகள் கைது

இது தொடர்பாக மாநகர காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நான்கு குற்றவாளிகளை கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள், கண்ணப்ப நகரை சேர்ந்த கோபி, கே.கே. நகரை சேர்ந்த மிட்டாய் கார்த்திக், வடவள்ளியை சேர்ந்த பிரதீப் என்பது தெரியவந்தது. மேலும் கண்ணப்பநகரை சேர்ந்த அஸ்வின், சரவணன் ஆகிய இருவர் தலைமறைவாகியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றவாளிகள் கைது
குற்றவாளிகள் கைது

ஏற்கனவே கண்ணப்பநகரில் யார் டான் என்பதில் இரண்டு தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்த சூழலில் காட்சனை கொலை செய்ய முற்பட்டதாகவும் அதற்குள் மக்கள் கூடியதால் விரைவாக அங்கிருந்து வெளியேறியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிடிபட்ட 4 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிசிடிவி காட்சிகள்

இதையும் படிங்க: பணத்த கொடு... இல்லனா உன் போட்டோவ ஆபாசம மார்பிங் செய்வோம்.. மூன்று இளைஞர்கள் கைது...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.