ETV Bharat / state

கண்காணிப்பு கேமரா பெட்டியில் விஷ பாம்புகள் - வனத்துறை ஊழியர்கள் உயிர் தப்பியது எப்படி? - Poisonous snakes trapped in Surveillance camera

கோவை: வனப்பகுதிக்குள் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பெட்டியில் கொடிய விஷமுள்ள பாம்புகள் இருந்த நிலையில், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டதால் வனத்துறை ஊழியர்கள் ஆபத்தின்றி தப்பினர்.

Poisonous snakes
Poisonous snakes
author img

By

Published : Nov 10, 2020, 1:46 AM IST

கோவை வனக் கோட்டத்தில் தொடர்ச்சியாக யானைகள் உயிரிழந்து வந்த நிலையில் யானைகளின் நடமாட்டத்தையும் அதன் உடல் நலத்தையும் கண்டறிய கோவை வனக் கோட்டத்தில் தடாகம், மதுக்கரை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது.

இதன் மூலம் யானைகள் நடமாட்டம் மட்டுமன்றி மற்ற வன விலங்குகளின் நடமாட்டத்தையும் கண்டறியும் வகையில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த கண்காணிப்பு கேமராவில் போளுவாம்பட்டி மற்றும் ஆனைகட்டி பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் போட்டோ மற்றும் வீடியோ காட்சிகளை அவ்வப்போது சேகரிப்பது வழக்கம். இதனிடையே தடாகம் வால்குட்டை பகுதியில் வைக்கப்பட்ட தானியங்கி கேமரா காட்சிகளை வனத்துறை ஊழியர்கள் சேகரிக்க முயன்றனர்.

கண்காணிப்பு கேமரா பெட்டியில் விஷ பாம்புகள்

அப்போது கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் சுருட்டை விரியன் மற்றும் கட்டு விரியன் பாம்புகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த வனத்துறை ஊழியர்கள் பாம்பை வெளியேற்றி அதிலிருந்து கேமராவை கைப்பற்றினர்.

வனத்துறை ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரிக்கும் வனத்துறை ஊழியர்கள் மற்றும் வனப்பகுதிக்குள் ரோந்து செல்லும் ஊழியர்கள் மிகவும் கவனத்துடன் சென்று தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.