கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அதேப் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் பாலியல் துன்புறுத்தல் குறித்து கூறியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக் கொண்டான். இதையடுத்து, சிறுவன் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.