கோயம்புத்தூர்: 2021 ஜனவரி 2 ஆம் தேதி தொண்டாமுத்தூர் அருகே தேவராயபுரத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலினிடம் பூங்கொடி என்பவர் கேள்வி எழுப்பினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
பூங்கொடியை அங்கிருந்த திமுகவினர் அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக பூங்கொடி அளித்த புகாரின் பேரில் திமுகவினர் 4 பேர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சாதி குறித்த ஆவணங்களை பேரூர் வட்டாட்சியரிடம் , டி.எஸ்.பி அலுவலகத்தில் இருந்து கேட்கப்பட்டு இருந்தது.
சாதி தொடர்பான ஆவணங்களை சரிபார்த்தபோது வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் கொடுத்த பூங்கொடி, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் இல்லை, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என பேரூர் வட்டாட்சியர் அறிக்கை அளித்து இருந்தார்.
இதனையடுத்து இன்று (ஆக.9) திமுக நிர்வாகிகள் பேரூர் வட்டாட்சியர் அளித்த அறிக்கையை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகரிடம் அளித்தனர்.
அந்த மனுவில், திமுகவினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தவறாக வழக்கு போடப்பட்டு இருப்பதாகவும் உடனடியாக அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது