ETV Bharat / state

பொள்ளாச்சி கருப்பம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை - காரணம் என்ன? - Pollachi

Pollachi: பொள்ளாச்சியில் ஊராட்சி மன்றத் தலைவரை கைது செய்ய கோரி போயர் சமூகத்தினர் மற்றும் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

பொள்ளாச்சியில் ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய கோரி போயர் சமூகத்தினர் மனு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 10:31 AM IST

பொள்ளாச்சியில் ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய கோரி போயர் சமூகத்தினர் மனு

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர், தி.மு.க ஒன்றிய செயலாளர் கன்னிமுத்து. மேலும், அதே ஊராட்சியில் EB கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). கட்டிட வேலை செய்து வரும் இவர், தனக்கு சொந்தமான வீட்டை பூபதி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் பிரச்னை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கருப்பம்பாளையம் திமுக ஊராட்சி மன்றத் தலைவரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான கன்னிமுத்து, மணிகண்டனின் வீட்டை பூட்டி சாவியை எடுத்துச் சென்றுள்ளார். இதனை எதிர்த்து கேட்ட மணிகண்டனை, ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து, மணிகண்டன் அவரின் அலுவலகத்திற்குச் சென்று பார்த்தபோது அவர் இல்லாததால், தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கன்னிமுத்து தோட்டத்திற்கு அழைத்துள்ளார். தோட்டத்திற்குச் சென்ற மணிகண்டனை அறையில் அடைத்து, கைகளை கட்டி வைத்து, கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அங்கிருந்தவர்கள் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில், 150க்கு மேற்பட்டோர் ஆனைமலை காவல் நிலையத்தை முற்றுக்கையிட்டு கன்னிமுத்துவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், கன்னிமுத்துவை உடனடியாக கைது செய்ய வேண்டும், மணிகண்டன் மீது போடப்பட்டுள்ள பி.சி.ஆர் வழக்கை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி போயர் சமூகத்தினர் மற்றும் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் 500க்கும் மேற்பட்டோர், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

மேலும், கன்னிமுத்துவை கைது செய்யவில்லை என்றால், தமிழகம் முழுவதும் சங்கங்கள் ஒன்று கூடி போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மாலத்தீவில் 12 இந்தியர்கள் கைது; மாலத்தீவுக்கும் இந்திய அரசுக்கும் பிரிவினையா? இதன் வெளிப்பாடே மீனவர்கள் கைதா? மீனவர் கூறுவது என்ன..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.