ETV Bharat / state

ஐயப்ப பக்தர்களுக்கு உணவு வாங்கி கொடுத்தவருக்கு அபராதம் விதித்த ரயில்வே அலுவலர்கள்! - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோயம்புத்தூர்: ஆந்திரவைச் சேர்ந்த சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு உணவு வாங்கி கொடுத்தவருக்கு ரயில்வே அலுவலர்கள் அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபராதம் செலுத்திய பாபாராவ்
author img

By

Published : Nov 17, 2019, 3:51 AM IST

ஆந்திர மாநிலம் இச்சாபுரத்தைச் சேர்ந்தவர் பாபாராவ். இவர், பத்து வருடங்களாக கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற பாபாராவ் சபரிமலைக்கு மலைப்போட்ட உறவினர்கள் 35பேருடன் கோவை வழியாக ரயிலில் மீண்டும் கோவைக்கு வந்துள்ளார்.

இந்த ரயில் கோவை ரயில் நிலையத்திற்கு வந்த போது, உறவினர்கள் அவரிடம் உணவு வாங்கி கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதையோற்ற பாபாராவ் ரயில் நிலையத்தில் உள்ள, ஓட்டலில் 35பேருக்கு உணவு வாங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த ரயில்வே காவல் உதவி ஆய்வாளர், பாபாராவுக்கு உணவு வழங்க தடை விதித்துடன் ரூ. 1,500 அபராதமும் விதித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடந்தை பாபாராவ் உறவினர்கள் வாக்குவாத்தில் ஈடுப்ட்டனர்.

அபராதம் செலுத்திய பாபாராவ்

இது குறித்து ரயில்வே அலுவலர்கள் கூறுகையில், ரயிலில் பயணிக்கும் அதிக பயணிகளுக்கு ஒரே நேரத்தில் உணவு வாங்க வேண்டுமென்றால் ரயில்வே துறையில் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். வெளியில் வாங்கி தரும் உணவின் மூலம் ஒவ்வாமை ஏற்பட்டால் அதற்கு ரயில்வே அலுவலர்கள் தான் பொருப்பேற்க வேண்டும் அதன் அடிப்படையில் தான் அபராதம் விதித்ததாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க : தெருவில் சுற்றித் திரியும் மாடுகள் சிறைப்பிடிப்பு - உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம்!

Intro:சபரிமலை செல்லும் ஆந்திர ஐயப்ப பக்தர்களுக்கு உணவளிக்க சென்றவரை தடுத்த ரயில்வே காவல் அதிகாரி.Body:சபரிமலை செல்லும் ஆந்திர ஐயப்ப பக்தர்களுக்கு உணவளிக்க சென்றவரை தடுத்த ரயில்வே காவல் அதிகாரி.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த பாபாராவ் கடந்த பத்து ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் இச்சாபுரம். நேற்று ஆந்திராவில் இருந்து கோவை வழியாக கேரளா சபரிமலைக்கு செல்ல அவர் உறவினர்கள் 35 பேர் மாலை போட்டுக்கொண்டு ரயிலில் வந்துள்ளனர். அவர்களுக்கு மதிய உணவை ஹோட்டலில் வாங்கி ரயிலில் வரும் அவர்களிடம் தர பாபாராவ் கோவை ரயில் நிலையம் சென்றுள்ளார். அதை அங்குள்ள காவல் அதிகாரி ஒருவர் அந்த உணவினை அவர்களுக்கு தர தடை செய்து உணவினை வழங்க விடாமல் செய்துள்ளார். மேலும் 1500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதை பற்றி வினவுகையில் அதிக பேருக்கு உணவு தர வேண்டுமென்றால் ரயில்வே துறையில் அனுமதி வாங்கி இருக்க வேண்டும் வெளியில் வாங்கி தரும் உணவின் மூலம் ஒவ்வாமை ஏற்பட்டால் அதற்கு ரயில்வே அதிகாரிகள் தான் பொருப்பேற்க வேண்டும் என்று தெரியவந்தது. அதன் அடிப்படையில் தான் அபராதம் விதித்ததாக அச்சம்பவம் நடந்ததாக தெரிகிறது.

இருப்பினும் அபராதம் விதித்தாலும் சபரிமலைக்கு செல்லும் உறவினர்களுக்கு அந்த உணவினை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்றும் அந்த உணவினை யாருக்கும் தராமல் அங்கேயே கொட்டி வந்தது வருத்தத்தை அளிக்கிறது என்றும் பாபாராவ் கூறினார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.