ETV Bharat / state

பெரியார் சிலை மீது காவி சாயம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய உணர்வாளர்கள் - periyar supporters protest

கோயம்புத்தூர்: தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தி காவி சாயம் பூசியதை கண்டித்து, காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகே பெரியாரிய உணர்வாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியார் சிலை மீது காவி சாயம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய உணர்வாளர்கள்
பெரியாரிய உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Sep 27, 2020, 3:40 PM IST

திருச்சி மாவட்டத்தில் இன்று காலை தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தி அதன் மீது காவி சாயம் பூசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பெரியாரிய உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய உணர்வாளர்கள், பெரியார் சிலையை சேதப்படுத்தி, காவி சாயம் பூசியவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.

பெரியார் சிலை மீது காவி சாயம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய உணர்வாளர்கள்
பெரியாரிய உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

அன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பெரியாரிய உணர்வாளர் வென்மணி, " திருச்சி மாவட்டத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்தி காவி சாயம் பூசிய இந்து பாசிச நபர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் மதவெறியை தூண்டும் நோக்கிலும் பல்வேறு அமைப்பினர் இதுபோன்ற செயல்களை செய்துவருகின்றனர். கோவையில் இரு மாதங்களுக்கு முன்பு குனியமுத்தூர் பகுதியில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் இரண்டே மாதத்தில் வெளிவந்துள்ளார். அது எப்படி என்று தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மனதின் குரல் உரையில் வில்லுப்பாட்டை புகழ்ந்த பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.