ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருபவர், பேரறிவாளன். அவரது தந்தை ஞானசேகரன் இடுப்பு எலும்பு முறிவால் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இதனைத் தொடர்ந்து பரோலில் வந்த பேரறிவாளன், பல்வேறு எலும்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று தனது தந்தையை மேல் சிகிச்சைக்காக கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்க முடிவெடுத்தார். பேரறிவாளனின் சகோதரி அன்புமணி உதவியுடன் அவரது தந்தை ஞானசேகரன் கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இன்று(அக்.13) அவருக்கு இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி பேரறிவாளன் தனது வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்பதால், அவர் ஜோலார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தங்கியுள்ளார். அவருடன் தாய் அற்புதம்மாள் தங்கியுள்ள நிலையில், அவரின் சகோதரியும் நண்பர்களும் பேரறிவாளனின் தந்தையை கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல்