ETV Bharat / state

முள்ளி வனப்பகுதியில் மக்னா யானையை விட கடும் எதிர்ப்பு - வனத்துறை குழப்பம்! - மக்னா

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானையை மேட்டுப்பாளையம் அருகே முள்ளி வனப்பகுதியில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்னா யானையை கொண்டு சென்ற லாரியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்தினர்.

மக்னா யானை
மக்னா யானை
author img

By

Published : Feb 24, 2023, 9:40 AM IST

Updated : Feb 24, 2023, 10:30 AM IST

மக்னா யானையை முள்ளி வனப்பகுதியில் விடுவதற்கு எதிர்ப்பு

கோயம்புத்தூர்: மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானையை முள்ளி வனபகுதிக்குள் விட எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் வனத்துறை வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி பெரியூர் ஈச்சம்பள்ளம் பகுதியில் விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து சேதம் செய்து வந்த மக்னா யானையை வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் கடந்த ஐந்தாம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் மக்னா யானையை கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியில் உள்ள வர கழியாறு வனப்பகுதியில் விட்டனர்.

இந்த நிலையில் வனப்பகுதியை விட்டு திடீரென வெளியேறிய மக்னா யானை செம்மணம்பதி வழியாக பல கிராமங்களை கடந்து கோவையை நோக்கி வந்தது. யானையை பின் தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர், வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் கோவை நகருக்குள் யானை நுழைந்தது. இந்த நிலையில் கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பேரூரில் மக்னா யானைக்கு மயக்கு ஊசி செலுத்தி பிடித்தனர்.

அதன் பின்னர் மக்னா யானையை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணைக்கு செல்லும் வழியில் தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள முள்ளி அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் ஏற்பாடு செய்தனர். அப்போது தொடக்கத்திலேயே அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொது மக்கள் எதிர்ப்பை மீறி கும்கி யானைகள் உதவியுடன் மக்னா யானை லாரியில் ஏற்றிய வனத்துறையினர் முள்ளி வனப்பகுதியில் விடுவதற்காக மேட்டுப்பாளையம் அருகே காரமடை அடுத்துள்ள வெள்ளியங்காடு பகுதியில் அதிகாலையில் சென்று கொண்டிருந்ததனர்.

முள்ளி வனப்பகுதியில் மக்னா யானையை விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் யானையை ஏற்றி வந்த லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் திடீர் போராட்டத்தின் காரணமாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானையை மீண்டும் டாப்சிலிப் பகுதிக்கு கொண்டு செல்வதா? அல்லது வேறு எங்காவது வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவதா? என்று வனத்துறையினர் தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அட்டகாசம் செய்த மக்னா யானை - மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை..முழுப்பின்னணி!

Last Updated : Feb 24, 2023, 10:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.