கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 21ஆவது வார்டு குமாரசாமி காலனி, முத்தண்ணன் குளம் பகுதிகளில் உள்ள மக்களை குடியிருப்பு பகுதிக்கு மாற்றுவதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வீட்டின் முன் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
அப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை அப்பகுதியிலிருந்து உக்கடம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்கு அனுப்பும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டும் , பள்ளி குழந்தைகள் படிப்பதற்காக நீண்ட தூரம் வர வேண்டியிருக்கும் என்பதாலும் இதனை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி வீட்டின் முன் கருப்புக் கொடி கட்டி மக்கள் அவர்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.