ETV Bharat / state

டாப்சிலிப்பில் பொங்கல் கொண்டாட்டம் - சின்னதம்பி உட்பட 18 யானைகள் பங்கேற்பு

author img

By

Published : Jan 18, 2020, 9:30 AM IST

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் சின்னதம்பி உட்பட 18 வளர்ப்பு யானைகள் கலந்துகொண்டன.

டாப்சிலிபில் பொங்கல் கொண்டாட்டம்
டாப்சிலிபில் பொங்கல் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் டாப்சிலிப்பில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. வனத்துறை சார்பில் பாராமரிக்கப்பட்டுவரும் சின்னதம்பி உட்பட 18 வளர்ப்பு யானைகள் கோழிகமுத்தி முகாமிலிருந்து பாப்சிலிப்புக்கு அழைத்து வரப்பட்டு மாலை அணிவித்து அணிவகுத்து நிற்கவைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து மலைவாழ் மக்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் யானைக்கு பிடித்த வாழைப்பழம், கரும்பு, தேங்காய், பொங்கல் ஆகியவை உணவாக வழங்கப்பட்டன. இதில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டு ரசித்ததோடு, அவர்களும் யானைகளுக்கு கரும்பு, வாழைப்பழம் ஆகியவை கொடுத்து மகிழ்ந்தனர்.

டாப்சிலிப்பில் உள்ள புல்மலையில் யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வந்து, சுற்றுலாப் பயணிகளைப் பார்த்து ஒரே நேரத்தில் தும்பிக்கைகளைத் தூக்கியபடி பிளிறின. இந்தக் காட்சி அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளை வியப்பில் அழ்த்தியது. அதனைச் சுற்றுலாப் பயணிகள் தங்களது கைபேசி மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

டாப்சிலிபில் பொங்கல் கொண்டாட்டம்

தைத்திருநாளில் யானைகளைப் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: காணும் பொங்கலுக்காக குவிந்த சுற்றுலா பயணிகள்- களைகட்டும் சித்தன்னவாசல்.!

Intro:top slipBody:top slipConclusion:பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிபில் யானை பொங்கல் கொண்டாட்டம் - சின்னதம்பி உட்பட 18 வளர்ப்பு யானைகள் பங்கேற்பு - யானைகள் ஒரே நேரத்தில் பிளறிய காட்சியை கண்டு சுற்றுலா பயணிகள் வியப்பு

பொள்ளாச்சி -ஜன-17

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் டாப்சிலிபில் யானை பொங்கல் இன்று கொண்டாடபட்டது, வனத்துறை சார்பில் பாரமரிக்கபட்டு வரும் சின்னதம்பி உட்பட 18 வளர்ப்பு யானை கோழிகமுத்தி முகாமில் இருந்து பாப்சிலிபிக்கு அழைத்து வரப்பட்டு மாலை அணிவித்து அணிவகுத்து நிற்க வைக்கபட்டது, இதைத் தொடர்ந்து மலைவாழ் மக்கள் சார்பில் புது பானையில் பொங்கல் வைக்கபட்டு சிறப்பு பூஜை நடத்தபட்டு யானைக்கு பிடித்த வாழைபழம், கரும்பு, தேங்காய் மற்றும் பொங்கல் உணவாக வழங்கபட்டது, இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு ரசித்ததோடு அவர்களும் யானைகளுக்கு கரும்பு வாழைபழத்தை வழங்கி மகிழ்ந்தனர், இதைத் தொடர்ந்து யானைகளின் அணிவகுப்பு நடைபெற்றது டாப்சிலிபில் உள்ள புல் மலையில் யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வந்து சுற்றுலா பயணிகளை பார்த்து ஒரே நேரத்தில் துதிக்கையை தூக்கியபடி பிளறிய காட்சி அங்கிருந்த சுற்றுலா பயணிகளை வியப்பை அழ்த்தியது, யானைகள் அணிவகுத்து வரும் போது இருப்புறமும் இருந்த சுற்றுலா பயணிகள் அலைபேசி மூலம் புகைபடம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர், தை திருநாளில் மாட்டு பொங்கல் போல் யானை பொங்கல் பார்த்தது மகிழ்ச்சி யடைந்தாகவும், வனப்பகுதி பாதுகாப்பிற்கு யானைகளின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதை இதன் மூலம் தெரித்து கொண்டதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.