ETV Bharat / state

நோயால் அவதியுறும் குழந்தை - ஆட்சியரிடம் நிதியுதவி கேட்டு பெற்றோர் மனு - குழந்தைக்கு மருத்துவ உதவி கேட்ட பெற்றோர்

கோயம்புத்தூரில் முதுகு தண்டுவட சிதைவு நோயால் அவதிப்படும் மூன்று மாதக் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு, அரசு நிதி வழங்கி உதவி செய்ய வேண்டும் எனக் கோரி, குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

parents petition  medical help  parents ask help for their infant  parents petition to collector to help their infant  coimbatore collector  coimbatore news  coimbatore latest news  கோயம்புத்தூர் செய்திகள்  குழந்தைக்கு மருத்துவ உதவி கேட்ட பெற்றோர்  மருத்துவ உதவி
நிதி உதவி
author img

By

Published : Nov 2, 2021, 2:22 PM IST

கோயம்புத்தூர்: மதுக்கரையை க.க.சாவடி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்- ரோமிலா தம்பதியினர். இவர்களுக்கு ஜேசன் என்ற மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்களது குழந்தைக்கு முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோய் உள்ளது.

இந்நிலையில், குழந்தையின் சிகிச்சைகாக சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பிலான தடுப்பூசி செலுத்த வேண்டியிருந்தது. இதற்கு அமெரிக்க மருந்து நிறுவனம் குலுக்கல் முறையில் இந்த குழந்தைக்கு இலவசமாக அந்த தடுப்பூசியை செலுத்தியது.

குழந்தையின் சிகிச்சைக்கு நிதி உதவி கேட்டு பெற்றோர் மனு

இதனிடையே குழந்தையின் மூச்சுக்குழாயில் அடைப்பு இருப்பதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு ஒன்பது லட்சம் ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் குழந்தையின் பெற்றோர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அறுவை சிகிச்சை செய்வதற்கு நிதியுதவி செய்யுமாறு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குழந்தையின் பெற்றோர், “எங்கள் குழந்தைக்கு மூச்சு குழாயில் பிரச்சினை இருப்பதால் தொண்டை மற்றும் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக ஒன்பது லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே எங்களுக்கு உதவிட வேண்டும் என அமைச்சர் மற்றும் ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால் எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை.

எங்களது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அரசு மற்றும் பொது மக்கள் உதவினால் பேருதவியாக இருக்கும். குழந்தைக்கு உதவ நினைப்பவர்கள் 7092558807 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் நிதி வழங்கலாம்” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பணமோசடி: முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.