கோவை: இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மாநகரில் அமைந்துள்ள பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வின்போது பள்ளிகளுக்கு குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர்களில் சுமார் 60 சதவீதம் பெற்றோர்கள் மட்டுமே தலைக்கவசம் அணிந்து வருவது தெரியவந்துள்ளது.
எனவே, பள்ளிகளுக்கு குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர்கள் தலைக்கவசம் கண்டிப்பாக அணிந்து வர வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனிவரும் நாட்களில், அனைத்து பள்ளிகளின் அருகிலும் வாகனத் தணிக்கை மேற்கொண்டு இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வரும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:திமுக பொதுக்கூட்டத்தில் தீக்குளிப்பேன் - மிரட்டல் கடிதம் எழுதிய யூனியன் சேர்மன்