ETV Bharat / state

'நலிவடைந்த சிறு தொழில்கள் மறுசீரமைக்கப்படும்' - பி.ஆர்.நடராஜன் வாக்குறுதி!

கோவை: "மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க திட்டம் தீட்டப்படும்" என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் உறுதியளித்துள்ளார்.

cpm candit
author img

By

Published : Mar 16, 2019, 7:21 PM IST

திமுக கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.ஆர்.நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம், கோவை ரயில் நிலையம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர். நடராஜன் கூறுகையில்,

மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் கடந்த 5 ஆண்டுகளில் கடுமையாக தொழில்துறை நலிவடைந்துள்ளது. சிறு தொழில்களை மறுசீரமைக்க திட்டம் வகுக்கப்படும். கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதை தடுக்க, மத்திய அரசின் பங்களிப்புடன் கூடுதல் மேம்பாலங்கள் கட்ட வலியுறுத்தப்படும்.

கோவை பாரதியார் பல்கலைகழகத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் நேர்மையான விசாரணை நடத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும், என்றார்.

cpm candit

அவரை தொடர்ந்து, மயூரா ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மார்க்சிஸ்ட் வேட்பாளரை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கூட்டணி கட்சியினர் உழைப்பார்கள். தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

சு.சீனிவாசன்.          கோவை

கோவை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க திட்டம் தீட்டப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் உறுதியளித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார். கோவை இரயில் நிலையம் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட்டோருடன் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் கடுமையாக நலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க திட்டம் வகுக்கப்படும் என உறுதியளித்தார். பொள்ளாச்சி பாலியம் துன்புறுத்தல் வழக்கில் தொடர்புடைய அனைவர் குறித்தும் நேர்மையாக விசாரணை நடத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அவர் அப்போது வலியுறித்தினார். கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதை தடுக்க மத்திய அரசின் பங்களிப்புடன் கூடுதல் மேம்பாலங்கள் கட்ட வலியுறுத்தப்படும் எனவும், தொழில்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான இரவு நேர பெங்களூரூ இரயில் வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை பாரதியார் பல்கலைகழகத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அப்போது உறுதியளித்தார். அப்போது பேசிய காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் வேட்பாளரை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கூட்டணி கட்சியினர் உழைப்பார்கள் என குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோரிக்கை விடுத்தார்.

Video in reporter app
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.