கோவையில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோயாளிகள் பலருக்கும் ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் பல நோயாளிகள் ஆம்புலன்சிலேயே காத்திருக்கும் நிலையும் ஏற்படுகிறது.
இந்நிலையில் கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் (KGiSL) தொழில் முனைவோர் கூட்டமைப்புடன் இணைந்து ஆக்ஸிஜன் வசதிகள் பொருத்திய இரண்டு பேருந்துகளை, கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது. ஒரு பேருந்துக்கு 12 பேர் வீதம் இதில் ஆக்ஸிஜனை சுவாசித்துக் கொள்ளலாம்.
இந்த பேருந்துகளில் சேவா கேசஸ் என்ற நிறுவனம் ஆக்ஸிஜனை நிரப்பித் தருவதாக கூறியுள்ளது. இதற்கு கோவை அரசு மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சர்கள் கைது, சிபிஐ அலுவலகம் முன் மம்தா தர்ணா!