இந்தியாவில் வெங்காயத்தின் உற்பத்தி பெருமளவு குறைந்த நிலையில், அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் வெங்காயம் வாங்குவதைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை பார்க் வீதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வெங்காய விலை உயர்வைக் கண்டித்து அதற்கு மாலை அணிவித்து மலர் வளையம் வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் வெங்காய விலையை உடனே கட்டுப்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: சின்ன வெங்காயம் விலை உயர்வு : விவசாயிகள் கொண்டாட்டம், மக்கள் திண்டாட்டம்!