ETV Bharat / state

ஓணம் பண்டிகைக்காக பயிரிடப்பட்ட செண்டுமல்லி பூ மழையால் சேதம்! - மழை

கோவை: ஓணம் பண்டிகைக்காக பயிரிடப்பட்ட செண்டுமல்லி பூ மழையால் முற்றிலும் சேதமாகியுள்ளன. இதனால் ஓணம் பண்டிகையின்போது பூவின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

onam flowers
author img

By

Published : Aug 16, 2019, 8:14 AM IST

கேரள மாநிலத்தின் முக்கியப் பண்டிகையான ஓணம் அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ளது. ஓணம் பண்டிகையையொட்டி ஒவ்வொரு வீடுகளிலும் அத்தப்பூ கோலம் இடுவது வழக்கம். இதற்காக அதிகளவில் செண்டுமல்லி பூ பயன்படுத்துகின்றனர். இந்தப் பூ தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கேரளாவிற்குச் செல்லும்.

இந்நிலையில், இந்தாண்டு ஓணம் பண்டிகைக்காக கோவை நரசிபுரம் பகுதியில் சுமார் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் செண்டுமல்லி பூ பயிரிட்டிருந்தனர். பூ பறிக்க இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் அண்மையில் பெய்த கனமழையால் செண்டுமல்லி பூ அதிகளவு அழுகின. இதனால் பூ பறித்து அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கேரளாவிற்கு செண்டுமல்லி பூ அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையையொட்டி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் செண்டுமல்லி பயிரிட்டு கேரளாவிற்கு அனுப்புவோம். இந்நிலையில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக பயிரிடப்பட்ட அனைத்துப் பூவும் பறிக்கும் சமயத்தில் அழுகிவிட்டன.

இதனால் கேரளாவிற்கு பூக்கள் அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டதோடு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு கேரளாவில் ஏற்பட்ட பெரும் மழையால் ஓணம் பண்டிகையை கொண்டாட முடியாத நிலையில் பூக்களின் விலை மிகக் குறைவாக விற்கப்பட்டதால் நஷ்டம் ஏற்பட்டது" என்றார்.

ஓணம் பண்டிகைக்காக பயிரிடப்பட்ட பூ மழையால் சேதம்!

இந்நிலையில், இந்தாண்டு பெய்த மழையால் சேதமடைந்துள்ள பூவுக்கு ஈடாக தங்களுக்கு அரசு பயிர் காப்பீடு மூலம் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என அனைத்து விவசாயிகளும் கோரிக்கைவைத்துள்ளனர்.

Intro:ஓணம் பண்டிகையையொட்டி கோவையில் பயிரிடப்பட்ட செண்டு மல்லி பூக்கள் கன மழையால் சேதம் அடைந்து உள்ளது இதனால் ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.Body:கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது ஓணம் பண்டிகையையொட்டி ஒவ்வொரு வீடுகளிலும் அத்தப்பூ கோலம் இடுவது வழக்கம் இதற்காக அதிக அளவில் செண்டு மல்லி பூக்கள் பயன்படுத்துவார்கள் இந்த பூக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு செல்வது வழக்கம் இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி கோவை நரசிபுரம் பகுதியில் சுமார் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் செண்டுமல்லி பயிரிட்டுள்ளனர்.பூ பறிக்கப் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அண்மையில் பெய்த கன மழையினால் செண்டுமல்லி பூக்கள் அதிக அளவு நீரில் அழுகி உள்ளது இதனால் பூக்கள் பறித்து அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளாவிற்கு சென்று மல்லி பூக்கள் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர் மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையையொட்டி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் செண்டுமல்லி பயிரிடப்பட்டு ஓணம் பண்டிகைக்காக கேரளாவிற்கு வருட வருடம் அனுப்பி வந்த நிலையில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக பயிரிடப்பட்ட அனைத்துப் பூக்களும் அறுவடை சமயத்தில் அழுகிவிட்டது எனவும் இதனால் கேரளாவிற்கு பூக்கள் அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டதோடு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர் கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெரும் மழையால் ஓணம் பண்டிகையை கொண்டாடத நிலையில் பூக்களின் விலை மிக குறைவாக இருந்ததால் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டு தற்போது பெய்த மழையால் இங்கு சேதமடைந்துள்ளதாகவும் தங்களுக்கு அரசு பயிர் காப்பீடு மூலம் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர் மேலும் நரசிபுரம், வெள்ளியங்கிரி பகுதிகளில் நான்காயிரம் ஏக்கர் வரை இந்த செண்டுமல்லி பயிரிடப்பட்டு உள்ளதாகவும் இவை அனைத்தும் நீரில் மூழ்கி அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர் எனினும் இந்த பூக்கள் அனுப்பாவிட்டால் ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் பூக்களின் விலை அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.