Omicron Spread: கோயம்புத்தூரைச் சேர்ந்த 69 வயதுடைய நபர், லண்டனிலிருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்தார். அப்போது மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையில், அவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரது மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டது. அதில் அந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இது குறித்து சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறுகையில், “லண்டனிலிருந்து கோயம்புத்தூர் வந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான தொண்டை வலி இருந்துள்ளது. இரண்டு முறை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியுள்ளார். தற்போது இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தற்போது 120 பேருக்கு ஒமைக்ரான் தொற்று