ETV Bharat / state

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய ஆம்புலன்ஸில் சென்ற மூதாட்டி! - ஆதார் அட்டை

கோவை: ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய மூதாட்டி ஒருவர் இ-சேவை அலுவலகத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் சென்றுள்ளார்.

ஜூலியா எலிசபத்
ஜூலியா எலிசபத்
author img

By

Published : Sep 14, 2020, 5:35 PM IST

கோவை மாவட்டம் கணுவாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜூலியா எலிசபத் (60). இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக நடக்க முடியாமல் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாக ஓய்வூதியம் வராத காரணத்தினால் மீண்டும் விண்ணப்பித்தபோது ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமென அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள இ-சேவை மையத்திற்கு ஜூலியாவின் மகள் சென்றபோது ஜூலியா தான் வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆனால் ஜூலியா வர இயலாது என்று நிலைமையை எடுத்துரைத்தபோதும் ஜூலியா வந்தால் மட்டுமே ஆதார் அட்டைக்கு திருத்தம் செய்ய விண்ணப்பிக்க முடியும் என்று இ-சேவை மைய அலுவலர்கள் கூறினர்.

ஆதார் அட்டை அவசரமாகத் தேவைப்பட்டதால் ஜூலியாவின் மகள் ஜுலியாவை ஆம்புலன்ஸ் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.