கோவை சிங்காநல்லூர் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டித் தருமாறு திமுக சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் தமிழ்நாடு அரசைக் கண்டித்து பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களும் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்எல்ஏ நா. கார்த்திக், " சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே உள்ள குடியிருப்பு வீடுகள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன. இது குறித்து சட்டமன்றத்தில் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை . இந்த நிலை தொடர்ந்தால், வீடுகள் இடிந்து மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே, விரைவில் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும். அதுவரை அங்குள்ள மக்களுக்குத் தற்காலிகமாக மாற்று இடம் ஒதுக்கித் தற்காலிக வீடுகள் தர வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: காப்பீடு இல்லாத வாகனத்தை விற்க சட்டத்தில் திருத்தம் - அரசிதழில் வெளியீடு