ஈரோடு மாவட்டம் ஸ்ரீ அன்னபூர்ணா நிறுவனம் தயாரிக்கும் எண்ணெயில் கலப்படம் உள்ளதாக அந்த நிறுவனத்தின் மீதும், அதை விளம்பரப்படுத்தும்படி நடித்த நடிகை அஞ்சலி மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சுடர் பார்வை மக்கள் இயக்கத்தினர், கோவை சுகாதாரபணித் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளரிடம் சுடர் பார்வை இயக்கத்தின் பாலாஜி என்பவர் கூறியதாவது, ’ஈரோடு மாவட்டத்தில் தயாரிக்கப்படும் இந்த எண்ணெயில் கலப்படம் செய்வதாக தெரிய வந்ததை அடுத்து, அந்த எண்ணெயை கேரளாவில் உள்ள ஆய்வகத்தில் சோதனைக்கு அனுப்பியதாகவும் ஆய்வின் முடிவில் அந்த எண்ணெயில் சேர்க்கப்பட்டதாக தெரிவித்த சிலப் பொருட்கள் சேர்க்கபடவில்லை என்றும் தெரியவந்தது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தின் மீதும், தரமற்ற பொருட்களுக்கு விளம்பரத்தில் நடித்த நடிகை அஞ்சலி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த எண்ணெய் விற்கப்படும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று விற்பனையை தடுக்க எங்கள் இயக்கம் தயாராக உள்ளது’ என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 200 கிலோ கலப்பட தேயிலைத் தூள் பறிமுதல்!