ETV Bharat / state

ரயில் நிலையம் நோக்கி நடந்த வடமாநில தொழிலாளர்கள் - திருப்பி அனுப்பிய போலீஸார் - north indians sent to residences

கோயம்புத்தூர்: ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்குச் செல்ல ரயில் நிலையம் நோக்கி நடந்து வந்த வடமாநிலத் தொழிலாளர்களை மறித்த சூலூர் காவல்துறையினர், அவர்களை தங்கியிருந்த இடத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தனர்.

north indians sent back to residences by Coimbatore police

author img

By

Published : May 15, 2020, 8:26 PM IST

கரோனா வைரஸ் காரணமாக கடந்த 45 நாள்களுக்கும் மேலாக வேலை இல்லாமல் தவித்துவரும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல நடந்தும், ரயிலிலும் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களை தடுத்து நிறுத்தும் வருவாய் துறையினர், காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து தனியார் இடத்தில் தங்க வைத்து வருகின்றனர்.

இத்தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்ல பாஸ் வழங்கப்பட்டு ஒவ்வொருவராக அனுப்பப்பட்டு வருகின்றனர். எனினும் உடனடியாக தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என எண்ணி ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் ரயில் நிலையம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் கொளுத்தும் வெயிலில் குழந்தைகளை கூட்டிக்கொண்டு கோயம்புத்தூர் ரயில் நிலையம் நோக்கி நடந்து வந்தனர். அவர்களை சிந்தாமணி புதூர் அருகே மறித்த சூலூர் காவல்துறையினர் அவர்களை மீண்டும் தங்கி இருந்த இடத்திற்கே வாகனங்களில் அனுப்பிவைத்தனர். முறையாக அனுமதி பெற்றால்தான் ஊருக்குச் செல்ல அனுமதிக்க முடியும் எனவும் விரைவில் அனைவரும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்தனர்.

வடமாநில தொழிலாளர்களை திருப்பி அனுப்பிய காவல்துறையினர்

இதையும் படிங்க... ரயில் நிலையத்தில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள் - காற்றில் பறந்த தனி மனித இடைவெளி!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.