கோவையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இன்று தானியங்கி சுமைதூக்கும் இயந்திரத்தை இயக்கி வைத்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர், சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலைப்பளுவினைக் குறைக்க இரண்டு மாதங்களுக்குள் முதற்கட்டமாக 140 கிடங்குகளில் சுமை தூக்கும்தானியாங்கி இயந்திரங்கள் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.
நாடு முழுவதிற்கும் ஒரே நாடு, ஒரே ரேசன் என்று யார் வேண்டுமானாலும் என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் அதற்கு பெயர் பொதுவிநியோக திட்டம் தான் எனக் கூறினார். மேலும், தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் எந்த மாறுதலும் கிடையாது. எந்த சிக்கலும் இல்லாமல் அத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.
தமிழ்நாட்டில் நிலவும் மண்ணெண்ணெய் பற்றாக்குறையை தவிர்க்க கூடுதலாக மண்ணெண்ணெய் ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஸ்மார்ட் ரேசன் கார்டுகளில் திருத்தம், சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் அவர் கூறினார்