ETV Bharat / state

ஆனைகட்டியில் தொடங்கிய பொங்கல் பண்டிகை! ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம்! - adhivasi people

Pongal celebration: கோவை ஆனைகட்டி பகுதியில் உள்ள மலை கிராமங்களில் என்எம்சிடி அறக்கட்டளை மற்றும் அரிமா சங்கங்கள் இணைந்து ஆதிவாசி மக்களுடன் 14ம் ஆண்டாக பொங்கல் விழா கொண்டாடினர்.

ஆனைகட்டியில் பொங்கல் கொண்டாட்டம்..
ஆனைகட்டியில் பொங்கல் கொண்டாட்டம்..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 10:33 PM IST

ஆனைகட்டியில் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் கொண்டாடிய பழங்குடியினர்..

கோயம்புத்தூர்: கோவை நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளையானது ஏழை, எளிய மற்றும் மலைவாழ் மக்களுக்காக கடந்த 35 ஆண்டுகளாக சமூக மேம்பாட்டுப் பணியை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக வருடந்தோறும் கோவை ஆனைகட்டி கோபனாரிப் பகுதியில் உள்ள அனைத்து மலைவாழ் கிராமங்களையும் அழைத்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவதை வழக்கமாக கொண்டு உள்ளது.

அதை போல் இந்த வருடம் ஆனைகட்டி அருகில் உள்ள கோபனாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள நபார்ட் கிராம சந்தை வளாகத்தில் 14வது ஆண்டாக பொங்கல் விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. முன்னதாக, விழாவிற்கு வந்தவர்களை மலைவாழ் மக்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி பூக்கள் மற்றும் மூங்கில் குச்சி கொடுத்து வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து பொங்கல் வைக்கப்பட்டு, பொங்கலோ பொங்கல் என கோஷங்களை எழுப்பி சிறப்பு விருந்தினர்களும், மலைவாழ் மக்களும் மகிழ்ந்தனர். இந்த விழாவிற்கு நிர்வாக அறங்காவலர் ஏ.எஸ்.சங்கரநாராயணன் தலைமை தாங்கிய நிலையில் அரிமா சங்க ஆளுநர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில் தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை, கோவை மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். அதன் பின்னர் மலைவாழ் மக்களுடன் இணைந்து வந்திருந்த கல்லூரி மாணவ மாணவிகள், 21 அரிமா சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள், சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்யும் ஊழியர்கள் உள்பட அனைவரும் உற்சாகமாக நடனம் ஆடி கோலாகலமாக பொங்கல் விழாவை கொண்டாடினர்.

அதனை தொடர்ந்து 46 மலைவாழ் கிராமங்களை சேர்ந்த சுமார் 1,000 குடும்பங்களுக்கு புத்தாடைகள், லேப்டாப், பரிசல்கள், மலைவாழ் மக்கள் பிரத்யேகமாக பயன்படுத்தும் வாத்தியங்கள் என நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டன. இதில் 21 அரிமா சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள், சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்யும் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும், இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை சார்பில் உணவு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: துப்பாக்கிகளை நேரில் பார்த்து மகிழ்ந்த மக்கள்.. மாணவர்களை கவர்ந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.