கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வள்ர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமையேற்ற தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பின்ன்ர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
முறையான குடிநீர் விநியோகம்
கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சிகளில் 1200 கிராமங்கள் உள்ளது. அதில் 332 கிராமங்களில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. புதிய குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் மீதமுள்ள கிராமங்களுக்கும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும், கோவை மாநகராட்சியிலும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது பற்றி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் 5 ஆயிரம் தெரு விளக்குகள் தற்போது, எரியாமல் உள்ளன; ஒரு வாரத்திற்குள் ஊரக பகுதி மற்றும் மாநகராட்சி பகுதியில் தெருவிளக்குகள் சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
புதிய செயலி
தொழில் துறையில், உள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்காக புதிய செயலியை, தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
மாவட்டத்தின் தொழில்துறை மற்றும் வளர்ச்சிக்காக அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் அடங்கிய புதிய குழு அமைக்கப்பட்டு திட்டங்கள் குறித்து பரிசீலித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல முடிவு எட்டப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், மக்கள் சபை நிகழ்ச்சிகள் மூலம் உயர் அலுவலர்கள், வார்டு வாரியாக நேரில் சென்று மக்களை சந்தித்து மனுக்கள் பெற இருப்பதாக கூறினார். பெறப்படும் மனுக்கள் மீது, 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீடியோ: சாலையில் கையேந்தும் காவலர்; வேடிக்கை பார்க்கும் காவல் அலுவலர்!