நாடு முழுவதும் இன்று மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக தேர்வு மையங்களில் காலை முதலே மாணவர்கள் காத்திருந்து வருகின்றனர். இதில் கோவை மாவட்டத்தில் 16 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 10,627 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
நீட் தேர்வு மையங்களுக்கு வரும் அனைத்து மாணவ, மாணவிகளும் காதணி, கழுத்தணிகள் போன்றவற்றை அணிந்திருக்கக் கூடாது உள்ளிட்ட வழக்கமான கட்டுப்பாடுகள் இந்த முறையும் கடைபிடிக்கப்படுகின்றன.
மேலும், தற்போது கரோனா காலம் என்பதால் சானிடைசர்களே அவரவர்களே எடுத்து வர வேண்டும் என்றும், தண்ணீர் பாட்டிகள் எடுத்து வருவோர் ஸ்டிக்கர் ஒட்டாத பாட்டில்களை எடுத்து வரவேண்டும் என்றும் கூறபட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேர்வு மையங்களில் பணிபுரியும் அனைவருக்கும் முழு முகக்கவசங்கள் வழங்கபட்டுள்ளன. தேர்வர்கள் அனைவரும் இடைவெளி விட்டு நிற்கும் வகையில், ஒரு மீட்டர் இடைவெளியில் வட்டங்கள் இடப்பட்டுள்ளன.
தேர்விற்கு உள்ளே செல்லும் மாணவர்களுக்கு கிருமிநாசினிகள் வழங்கப்பட்டும், உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டும் வருகின்றது. இது குறித்து பேசிய நதியா என்னும் தேர்வர், ”அணிகலன்கள் அணியக்கூடாது, அதிக டிசைன்கள் இல்லாத ஆடைகளை அணிய வேண்டும் என்ற சில கட்டுபாடுகள் உள்ளன. கிருமி நாசினிகள், முகக்கவசம் உள்ளிட்டவைகளை பயன்படுத்த அறிவுறுத்திவுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:நீட் தற்கொலை விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்!