ETV Bharat / state

'அமைதிக்குப் பெயர்போன மாவட்டம் கோவை' - கலெக்டர் பெருமிதம் - தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு பேரணி -

கோவை: கோவை அமைதிக்குப் பெயர்போன மாவட்டம் என்று தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

National Voter Day Awareness Rally
National Voter Day Awareness Rally
author img

By

Published : Jan 25, 2020, 2:46 PM IST

வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி இந்தியா முழுவதும் வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும். சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அதன்படி வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.

இத்தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் அரசு கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட துறை மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியானது ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி ரேஸ்கோர்ஸ் சாலை வரை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள், தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் கு. ராசாமணி, ”தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. கோவை காவல் எல்லைக்குட்பட்ட சி-2 பந்தய சாலை (Race Course) காவல் நிலையம், மாநில அளவில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்ததற்குக் காரணம், அங்கு பணிபுரியும் காவலர்கள்தான். அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அமைதிக்குப் பெயர்போன மாவட்டமாக கோவை திகழ்கிறது. கோவையில் வாழும் மக்கள் அனைவரும் அமைதியை பறைசாற்றக் கூடியவர்கள்” என்றார்.

இதையும் படிங்க: அதிமுக பெயரில் போலி இணையதளம்: முன்னாள் எம்.பி. அதிரடி கைது!

Intro:வாக்காளர் தினத்தை முன்னிட்டு அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட துறை மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி.

Body:இன்று இந்தியா முழுவதும் வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது எனவே வாக்காளர் தினத்தை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட துறை மாணவர்கள் பேரணி நடத்தினர்.

இந்த பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் வாக்காளர் தினம் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது .இந்த பேரணி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ரேஸ்கோர்ஸ் வரை நடைபெற்றது இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தேர்தல் மற்றும் வாக்காளர்களை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில் இந்த பேரணி நடைபெற்றது என்று தெரிவித்தார். மேலும் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் பற்றி கேட்கையில் கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த வைரஸ் தாக்குதல் இதுவரை இல்லை என்றும் இருப்பினும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் மக்கள் நல்வாழ்வு துறை மூலம் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பணியில் மருத்துவர்கள் சோதனையில் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு கோவை ரேஸ் கோர்சில் உள்ள காவல் நிலையத்தை சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்ததற்கு அனைத்து காவலர்கள் தான் காரணம் என்றும் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். மேலும் கோவை மாவட்டமானது அமைதிக்கு பெயர் போன மாவட்டம் என்றும் கோவை மக்கள் அனைவரும் அமைதியை பறைசாற்றக் கூடிய மக்கள் என்றும் பெருமிதம் தெரிவித்தார். மேலும் கோவை மக்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் குடியரசு தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.