வருடந்தோறும் நவம்பர் 15 முதல் 21ஆம் தேதி வரை பச்சிளங்குழந்தைகள் வாரம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன், மெடிக்கல் ரெப் சடகோபன் ஆகியோர் தலைமையில் கோவை அரசு மருத்துவமனையில் இன்று தேசிய பச்சிளங்குழந்தைகள் வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பிறந்த குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சில அறிவுரைகள் கூறப்பட்டன. குழந்தை பிறந்து 1, 2, 3 வாரங்கள் தவறாமல் தடுப்பூசி போட வேண்டும் என்றும் பெண்கள் 15 வயது முதல் சத்துமாவு போன்ற சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டால் குழந்தை பெறும்போது அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.
அதன்பின் பேசிய முதல்வர் அசோகன், "பச்சிளங்குழந்தைகள், குறைமாத குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் மருத்துவம் செய்வது மிகக் கடினம். அதனால் தாய்மார்கள் தங்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்வதில்தான் குழந்தையின் நலம் உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் அக்குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் வசதிகள் உள்ளன.
1500 கிராம் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தகுந்த சிகிச்சை அளித்து தற்போது நலமோடு உள்ளனர். இங்கு தாய்ப்பால் வங்கி உள்ளதால் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பால் வழங்கவும் வசதிகள் உள்ளன" என்றார்.
இதையும் படிங்க:
ஆசைவார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது பாய்ந்த போக்சோ!