கோயம்புத்தூர்: உழவர்களின் உரிமைக் குரலாய் ஓங்கி ஒலித்து, பல விவசாய போராட்டங்களை முன்னின்று நடத்திய, தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமியின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
தமிழக உழவர் இயக்கத்தின் (தமிழக விவசாயிகள் சங்கம்) நிறுவனர் நாராயணசாமி நாயுடு. இவர் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும். வேளாண் பொருள்களுக்கு அரசு அடிப்படை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கட்ட இயலாத நிலையில் உள்ள உழவர்களின் வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வேளாண்மையை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும் என 25 ஆண்டுகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.
-
உழவர்களின் உரிமைக் குரலாய் ஓங்கி ஒலித்து, பல விவசாய போராட்டங்களை முன்னின்று நடத்திய, தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர், உழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி அய்யா அவர்களின் 37ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவை வையம்பாளையத்தில் அவரது நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினோம். pic.twitter.com/r8oHppyKyP
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">உழவர்களின் உரிமைக் குரலாய் ஓங்கி ஒலித்து, பல விவசாய போராட்டங்களை முன்னின்று நடத்திய, தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர், உழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி அய்யா அவர்களின் 37ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவை வையம்பாளையத்தில் அவரது நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினோம். pic.twitter.com/r8oHppyKyP
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) December 21, 2021உழவர்களின் உரிமைக் குரலாய் ஓங்கி ஒலித்து, பல விவசாய போராட்டங்களை முன்னின்று நடத்திய, தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர், உழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி அய்யா அவர்களின் 37ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவை வையம்பாளையத்தில் அவரது நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினோம். pic.twitter.com/r8oHppyKyP
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) December 21, 2021
அதன்பிறகு தன்னை முழுமையாக உழவுத் தொழிலில் ஈடுபடுத்திக் கொண்டார். 1957 முதலே உழவர்களின் போராட்டங்களில் கலந்துகொண்டார் நாராயணசாமி. உழவர்கள் தனித்து இருப்பதாலேயே தங்கள் கோரிக்கையில் வெற்றிபெற முடிவதில்லை என்பதை உணர்ந்து உழவர்கள் இயக்கத்தை கட்டமைப்பதிலே கவனம் செலுத்தினார்.
மேலும், 1968 கோவை வட்ட உழவர் இயக்கம் 1969இல் கோவை மாவட்ட உழவர் இயக்கம், 1970இல் தமிழக உழவர் இயக்கம் என உழவர் இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் கட்டமைத்தார்.
1970 லிருந்து 1980 வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற உழவர்களின் போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்தினார் நாராயணசாமி. உழவர் போராட்டங்களிலேயே கலந்துகொண்டதற்காகப் பலமுறை சிறை சென்றார். 1980-க்குப் பிறகு இந்திய அளவில் உழவர்களைத் திரட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார் நாராயணசாமி.
நாராயணசாமி 1984ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவரது நினைவாக மணிமண்டபம் கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் வட்டாரம் வையம்பாளையத்தில் உள்ளது. நாராயணசாமி நாயுடுவின் 37ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 21) வையம்பாளையத்தில் உள்ள மணிமண்டபத்தில் நடந்தது.
இதில் மதுவிலக்கு மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்று அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மணிமண்டப வளாகத்திலுள்ள நாராயணசாமி நாயுடுவின் போராட்டங்கள் குறித்த புகைப்படங்கள் அடங்கிய அரங்கிலும் புகைப்படங்களைப் பார்வையிட்டார்.
இதையடுத்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் 7 எம்எல்ஏக்கள் உள்பட அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். பாரதிய ஜனதா சார்பில் விவசாய அணி மாநிலத் தலைவர் நாகராஜ், கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கீதா உள்பட கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: நாராயணசாமி நாயுடு நினைவு தினம்: அரசிற்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்