கோவை: கோயம்புத்தூரில் கடந்த 7 வருடங்களாக பதவியில் இருந்த வெவ்வேறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயர்கள் ஒரே முகவரியில் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தவர் அர்ச்சனா பட்நாயக், இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியராக ஹரிஹரன், ராசாமணி ஆகியோர் பணிபுரிந்தனர். தற்போது மாவட்ட ஆட்சியராக சமீரன் இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த நான்கு மாவட்ட ஆட்சியரின் பெயர்களும், அவர்களது குடும்பத்தினர் பெயரும் ஒரே முகவரியில் இருப்பது தெரியவந்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஒரே எண்ணில் இந்த மாவட்ட ஆட்சியர்கள் அவர்களது குடும்பத்தினர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே மாவட்ட ஆட்சியர்களாக இருந்த அரச்சனா பட்நாயக், ஹரிகரன், ராசாமணி ஆகியோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெயர்களை பழைய முகவரியில் இருந்து அதிகாரிகள் நீக்கம் செய்யாமல் உள்ளனர். அதேவேளையில் தற்போதைய மாவட்ட ஆட்சியரின் பெயரும் இந்த முகவரியில் சேர்க்கப்பட்டுள்ளது.
இரட்டை பதிவு உள்ள ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் சமீபத்தில் கோவை மாவட்டத்தில் நீக்கப்பட்டது. ஆனாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகவரியிலேயே 4 ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெயர்கள் இடம்பெற்று இருப்பது வாக்காளர் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.
![ஒரே முகவரியில் நான்கு கலெக்டர்களின் பெயர்கள் - வாக்காளர் அட்டை சர்ச்சை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17063006_a.jpg)
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் நிலையில் கோவையில் மாவட்ட ஆட்சியர்களின் பெயர்களே நீக்கப்படாமல் ஒரே முகவரியில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெயர்கள் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: விநோத நோயால் அவதியுறும் நபருக்கு குவியும் உதவி!