ETV Bharat / state

காங்கிரஸ் கதர் கட்டிய பாஜக; பாஜக காவி கட்டிய காங்கிரஸ் - சீமான் விமர்சனம்! - Seeman byte

Seeman speech: கோயம்புத்தூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த சீமான், பாஜக குறித்தும், காங்கிரஸ் குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Naam Tamilar party coordinator seeman criticize bjp and congress in coimbatore
செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 5:43 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்

கோயம்புத்தூர்: ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “2024 தேர்தலுக்கான முன் தயாரிப்பு தான் இந்த கூட்டம். மூன்றாவது கட்டமாக இந்த பயணம் நடைபெறுகிறது. அடுத்த கட்டமாக இன்னும் இரண்டு பயணங்கள் உள்ளது. தஞ்சை சோழமண்டலம் மற்றும் வட மாவட்டங்களில் பயணம் உள்ளது. இந்த பயணத்தை எல்லாம் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க இருக்கிறோம். எங்கள் கட்சிக்கென்று ஒரு கொள்கை மற்றும் வரலாற்றுப் படிப்பினை உள்ளது.

மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன் திராவிட ஆற்றல்களுடன் சமரசம் செய்து விட்டார்கள்: நான் முன் வைக்கின்ற அரசியல் புதிது கிடையாது. எங்கள் முன்னோர்கள் முன்னெடுத்தது தான். இதற்கு முன்பு இருந்து வந்த தமிழ் தேசிய ஆற்றல்கள் எல்லாமே எந்த கோட்பாட்டை எதிர்த்து வந்தார்களோ, அந்த கோட்பாட்டைத் திருத்தி சரண் அடைய வேண்டிய சூழல் அமைந்துவிட்டது. அதற்காக அவர்களைக் குறை சொல்லவில்லை. அதனைத் தொடர்ந்து வந்த மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன் ஆகிய ஆற்றல்கள் எல்லாம் திராவிட ஆற்றல்களுடன் இன்று சண்டை செய்ய முடியாமல் சமரசம் செய்து விட்டார்கள்.

இது ஒரு படிப்பினையாக உள்ளது. வைகோ, விஜயகாந்த் போன்றவர்கள் எல்லாம் தனித்து நிற்கும் பொழுது அவர்களுடைய வாக்கு என்ன?, கூட்டு சேர்ந்து நிற்கும் போது அவர்களுடைய வாக்கு என்ன? எனவே மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். கட்சியின் மாற்றத்தை எதிர்பார்க்கும் பொழுது அதே கட்சியுடன் கூட்டணி வைக்கும் பொழுது மக்களின் மாற்றம் ஏமாற்றம் ஆகிவிடுகிறது.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேச வேண்டிய தேவை இல்லை: அதனை நான் செய்வதற்குத் தயாராக இல்லை. எனவே நான் தனித்து தான் நிற்பேன். இந்திய கட்சிகள், திராவிட கட்சிகளுடன் எந்த ஒரு உடன்பாடும் இல்லை” என்றார். அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “அவர் வர வேண்டும். பின்னர் அவரது கொள்கையை முன் வைக்க வேண்டும். அந்தக் கொள்கையில் எனக்கு உடன்பாடு இருக்க வேண்டும். எனது கொள்கையில் அவருக்கு உடன்பாடு இருக்க வேண்டும். பிறகு தான் அதைப் பற்றி பேச வேண்டும். தற்பொழுது அதைப் பற்றி பேச வேண்டிய தேவையும் இல்லை” என பதில் அளித்தார்.

எதற்காக மொழிவாரியாக இத்தனை மாநிலங்கள் பிரிந்தது?: சீமான் போட்டியிடும் இடத்தில் முப்பது சதவீதம் அதிகமான வாக்குகளை பாஜக வாங்கும் என பாஜக அண்ணாமலை தெரிவித்தது குறித்தான கேள்விக்கு, “அந்தக் கருத்தை நான் வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன். ஆனால் அதில் ஒன்று கவனிக்க வேண்டும். நான் 7 விழுக்காடு வாக்குகளை வைத்துள்ளேன். அவர் 30 விழுக்காடு எனக் கூறுகிறார், அப்படி என்றால் மொத்தம் 37 விழுக்காடு. 37 விழுக்காட்டை அவர் தொட்டு விடுவார் என்றால் அவர்களுக்கு அதிமுகவுடன் கூட்டணியே தேவையில்லை.

வெறுப்பு அரசியலை செய்பவன் அல்ல: அவர் தனியாக போட்டியிட்டு ஆட்சி அமைத்து விடலாமே. அவர் அவரது ஆதரவாளர்களையும் தொண்டர்களையும், ஊக்கப்படுத்துவதற்காகப் பேசுகிறார். நான் முன்வைக்கின்ற மொழி, இன, அரசியல் வெறுப்பு என்றால் எதற்காக மொழிவாரியாக இத்தனை மாநிலங்கள் பிரிந்தது?. அனைத்து நாடுகளிலும் மொழிவாரியான தேசிய இனங்கள் தான் உள்ளன. அப்படி என்றால் கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் எதிர்ப்பதை மட்டுமே பேசுவது வெறுப்பு அரசியல் இல்லையா?.

நான் வெறுப்பு அரசியலை செய்பவன் அல்ல. நான் எனது தேசிய இன உரிமைக்காக நிற்பவன். இந்தியாவில் இனிமேல் தான் காங்கிரஸ் வென்று வரப் போகிறதா அல்லது பாஜக ஆளப்போகிறதா. இத்தனை ஆண்டு காலம் காங்கிரசும் பாஜகவும் ஆட்சி செய்ததில் என்ன மாற்றம் வந்துள்ளது என நீங்கள் கருதுகிறீர்கள்?. நிலவுக்கு சந்திரயானையும், சூரியனுக்கு ஆதித்யாவையும் விடுவேன் என்பதற்குப் பதிலாக முதலில் ஒழுங்காகப் பேருந்து விடுங்கள், அதை விட்டுவிட்டு காமெடி செய்து கொண்டிருக்கிறீர்கள்.

நிலவில் குடியேறப்போவது இந்துவா? முஸ்லிமா? கிறிஸ்டியனா?: பேய்க்கும், பேய்க்கும் சண்டை என்பது போல் ரயிலுக்கும் ரயிலுக்கும் சண்டை வருகிறது. இதெல்லாம் உச்சபட்ச நகைச்சுவை. வயிறு காய்ந்து கிடக்கும் பொழுது வான்வெளியில் ஆய்வு என்பது என்னவாக கருதுவது?. 130 கோடியில் 80 கோடி ஏழைகள் என நாங்கள் சொல்லவில்லை நீங்கள் (மத்திய அரசு) தான் கூறினீர்கள். விண்வெளியில் ஆய்வு மேற்கொள்வது எந்த நேரத்திலும் தேவை இல்லை. இந்தியாவை விட வல்லா திக்க நாடு, பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடு, இந்தியாவிற்கு கடன் கொடுக்கின்ற நாடே சும்மா இருக்கிறார்கள்.

எந்த ராணுவ தடங்களைச் சொந்தமாக உருவாக்கினீர்கள்?. ரஃபேல் விமானத்தை எந்த நாடுகள் பணம் கொடுத்தாலும் அவர்கள் செய்து தருவார்கள். இங்கு தண்ணீர் இல்லை. ஆனால் விண்வெளியில் தண்ணீருக்கான ஆய்வு நடைபெறுகிறது. இங்கு சுவாசிக்க காற்றில்லை. விண்வெளியில் காற்றுக்கான ஆய்வு நடைபெறுகிறது. இதை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?. முதலில் அங்கு குடியேறப்போவது இந்துவா? முஸ்லிமா? கிறிஸ்டியனா?.

தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டும்: இந்தியர்களைச் சந்திர மண்டலத்தில் குடியேற வைத்துவிட்டு அமெரிக்காவும் ரஷ்யாவும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா?. இதெல்லாம் பண கொழுப்பு தான். திமுக, அதிமுகவுடன் நான் போட்டியிடுவது பங்காளி சண்டை போன்றது. இதில் இடையில் நீங்கள் (பாஜக) யார்?. வளரும் நாடுகள் பட்டியலிலேயே நாம் இல்லை. திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு அல்ல. தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு.

சாதி ஒழிப்பு என்றால் தன் ஜாதியை தவிர பிற ஜாதியை ஒழிப்பது தான் சாதி ஒழிப்பா?. என்னுடைய பார்வை என்பது மொழிப்பற்றும், இனப்பற்றும் என்னுடைய அடுத்த தலைமுறைக்கு வர வேண்டும். அவ்வாறு வரும் பட்சத்தில் சாதிய மத உணர்வு ஒழிந்து விடும். விளம்பரப் பலகையில் எங்கேனும் தமிழ் உள்ளதா?, ஆனால் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று பேசுவது யார்? வீழ்வது நாமாக இருந்தாலும் எழுவது தமிழாக இருக்கட்டும் என்று முழக்கமிட்டது யார்?” என்றார்.

மக்களுக்காகப் போராடுவதா? அல்லது விஜயலட்சுமியை எதிர்த்து போராடுவதா?: விஜயலட்சுமி குறித்தான கேள்விக்கு பதில் அளித்த சீமான், “நான் மக்களுக்காகப் போராடுவதா? அல்லது விஜயலட்சுமியை எதிர்த்துப் போராடுவதா?. காவிரி தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக காங்கிரஸ் கூறும் பொழுது இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் உங்களுக்கான இட ஒதுக்கீடு இல்லை என்று கூறி (திமுக) தண்ணீரை வாங்கித் தாருங்கள். அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் காங்கிரசை விட்டு விடுங்கள். நான் 40 தொகுதிகளிலும் இருந்து விலகி விடுகிறேன்.

மோடி, அமித்ஷா ஆகியோரே குடியுரிமை அற்றவர்கள் தான்: திமுக உதய சூரியன் சின்னத்தில் நேரடியாக மோடியை எதிர்த்தால் நான் அங்கிருந்து விலகிக் கொள்கிறேன் இல்லையென்றால் நான் போட்டியிடுகிறேன். பண மதிப்பிழப்பு செய்யும் பொழுது நீங்கள் (பாஜக) ஊழல் ஒழிந்து விடும் எனக் கூறினீர்கள். அப்போது மக்கள் பட்ட துயரங்களை நீங்கள் ஆராய்ந்தீர்களா?. CIA ஒன்றைக் கொண்டு வந்து வந்தீர்கள். ஆனால் மோடி மற்றும் அமித்ஷா பெற்றோர்களுக்கே பிறப்பு, இறப்பு சான்றிதழ் இல்லை.

அப்படி இருக்கும் பொழுது பிறரது அம்மா, அப்பாவிற்கு எப்படி பிறப்பு சான்றிதழ் இருக்கும். பிறப்பு சான்றிதழ் இல்லை என்றால் குடியுரிமை அற்றவன் என்று கூறினால் மோடி, அமித்ஷா ஆகியோரே குடியுரிமை அற்றவர்கள் தான். இந்தியா என்பது ஒரே நாடா? அல்லது பல நாடுகளின் ஒன்றியமா?. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே சாலை, ஒரே கல்வி திட்டம் என்றால் காவிரியில் இருந்து தண்ணீர் வாங்கி தர வேண்டும். நாடு முழுவதும் ஒரே நீர் என்பதை கொண்டு வர முடியுமா?. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை நடத்திக் காட்டுங்கள் பார்க்கலாம்.

காங்கிரஸ் மிதவாதம் பாஜக மதவாதம்: எனது தனிப்பட்ட முறையில், என் இன மக்களைக் கொன்று குவித்தது காங்கிரஸ் அரசு. அதற்கு உடந்தையாக இருந்தது திமுக. 2G அலைக்கற்றைக்காக நாடாளுமன்றத்தை முடக்கி போட்ட பாஜக, அதற்கு எதிராக ஒரு வார்த்தை பேசவில்லை. அதே போல் தான் அதிமுகவும். காங்கிரஸ் மிதவாதம் பாஜக மதவாதம்.

காங்கிரஸ் என்பது கதர் கட்டிய பாஜக. பாஜக என்பது காவி கட்டிய காங்கிரஸ். இரண்டிற்கும் ஏதேனும் வித்தியாசங்கள் உள்ளதா?. அதேபோலத்தான் அதிமுகவும், திமுகவும். அதிமுக கொடியில் அண்ணா இருப்பார். திமுக கொடியில் அண்ணா இருக்க மாட்டார்.
என் மீது அவதூறு பரப்பி அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அதற்கெல்லாம் பயப்பட கூடியவனா நான்?. இந்தியாவிற்கு இந்தியா என்று பெயர் வைத்தது வெள்ளைக்காரன். இந்து என்ற மதத்தை சட்டமாக்கியது யார்?. இந்தியா என்ற பெயரை எடுத்து விடுங்கள் நான் வாழ்த்துகிறேன்” என்றார்.

இதையும் படிங்க: வாக்கு வங்கிக்காக மட்டுமே ‘சனாதான தர்மம்’.. உதயநிதி ஸ்டாலினுக்கு அமித்ஷா எதிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.