கோயம்புத்தூர்: பீளமேடு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி முன்பு கடந்த சில நாட்களாக சென்னை பதிவெண் கொண்ட கார் நிற்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பீளமேடு காவல்துறையினர், கார் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் காரின் உரிமையாளர் அப்பள்ளியில் பேருந்து ஓட்டும் ரத்தினகுமார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் ஆவாரம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலைதான் காரை எடுத்து வந்து பள்ளியின் முன்பு நிறுத்தி உள்ளார். தொடர்ந்து அவர் காரை பழுது பார்ப்பதற்காக எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில், அங்கிருந்த காரை ரத்தினகுமார் எடுத்துச் சென்றார்.
இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ விசாரணை தொடங்கியது