ETV Bharat / state

ககன்யான் முதல்கட்ட திட்டம் ஆளில்லா விண்கலம், மூன்றாம் கட்டம் மனிதர்கள் விண்கலம் - மயில்சாமி அண்ணாதுரை - கோவை செய்திகள்

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்து தெரிவித்துள்ளார்.

மயில்சாமி அண்ணாதுரை அளித்த பேட்டி
மயில்சாமி அண்ணாதுரை அளித்த பேட்டி
author img

By

Published : Jan 2, 2023, 8:10 AM IST

மயில்சாமி அண்ணாதுரை அளித்த பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்க தொடக்க விழா நேற்று (ஜனவரி 1) நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும், சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குனரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணை தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி முன்னாள் மாணவர் சங்க கல்வெட்டையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் .

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது, அமெரிக்கா நிலவுக்கு ஆளில்லா விண்கலனை அனுப்பி கட்டமைப்பு வசதிகளை ஆராய்ந்து, அதன்பின் மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதுபோலவே ககன்யான் திட்டம் கரோனாவிற்கு முன்பு மூன்றடுக்கு திட்டமாக தொடங்கப்பட்டது. அதன் முதல் அடுக்கு ஆராய்சிகள் அடங்கியது. 2ஆம் கட்டம் ஆளில்லா விண்கலனை அனுப்புவதாகும். 3ஆம் கட்டத்தில் இந்திய மண்ணில் இருந்து மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் விண்கலத்தில் மனிதர்கள் பயணித்தால், அவர்களது உடல்நிலை எப்படி இருக்கும். அந்த சுற்றுப்புற சூழ்நிலைகளை எவ்வாறு பாதுகாப்பாக திட்டமிடுவது. விண்வெளியின் சீதோசன நிலைக்கு எப்படி அவர்களை தகவமைப்பது. இங்கிருந்து ஏவுகணைகள் மூலம் விண்கலன் செலுத்தப்படும்போது ஏற்படும் அதிர்வலைகளையும், வெப்பத்தையும் மனிதர்களால் தாங்கக்கூடிய வகையில் சீரமைப்பது உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்பட்டுவருகின்றன. இந்த முதல் கட்ட அமைப்பு இந்தாண்டு முடிவடைய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்: 'கிரையோஜெனிக் இயந்திர சோதனை' வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.