ETV Bharat / state

அமோக வெற்றி பெறுவேன்: சூலூர் அதிமுக வேட்பாளர் கந்தசாமி - AIADMK

கோவை: நடைபெற்றுவரும் சூலூர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவேன் என அதிமுக வேட்பாளர் கந்தசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் கந்தசாமி
author img

By

Published : May 19, 2019, 2:13 PM IST

இன்று காலை 7 மணி முதல் நான்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மூத்த வாக்காளர்கள், பெண்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்துவருகின்றனர்.

இந்நிலையில், சூலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கந்தசாமி வாக்களித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, சூலூர் தொகுதியில் நெசவாளர்களும், விவசாயிகளும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். தமிழ்நாடு அரசு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. அவற்றைக் கருத்தில்கொண்டு பொதுமக்கள் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமோக வெற்றிபெறுவேன். எனது வெற்றி அதிமுக அரசிற்கு கிடைக்கும் வெற்றி. அதிமுகவை எதிர்த்து நிற்கின்ற அனைவரும் உறுதியாக வைப்புத்தொகை இழப்பார்கள் எனக் கூறினார்.

சூலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கந்தசாமி

மேலும், அமமுக ஒரு அமைப்பே இல்லை. சிலர் காசிற்காக அமமுக சென்றாலும், உண்மையான தொண்டர்கள் அதிமுகவிலேயே உள்ளனர் எனக் கருத்து தெரிவித்தார்.

சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமி பேட்டி

சூலூரில் வாக்குப்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது

பொதுமக்கள் தமிழக அரசிற்கு ஆதரவு அளிக்க வேண்டும்

சூலூர் தொகுதியில் அதிகமாக உள்ள நெசவாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது

சூலூர் தொகுதியில் அமோக வெற்றி பெறுவேன்

எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள்

எனது வெற்றி என்பது தமிழக அரசிற்கு கிடைக்கும் வெற்றி

அமமுக ஒரு அமைப்பே அல்ல. எங்கள் பகுதியில் அந்த கட்சியே இல்லை

காசிற்காக சிலர் அமமுக சென்றாலும், உண்மையான தொண்டர்கள் அதிமுகவிலேயே உள்ளனர்

அமமுக வெற்றியை பாதிக்காது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.