ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து குடும்பம் குடும்பமாக பேரணி - குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து பேரணி

கோவை: குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் குடும்பத்துடன் பேரணி சென்றனர்.

CAA against rally
CAA against rally
author img

By

Published : Jan 14, 2020, 10:06 AM IST

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பல அமைப்பினர் தங்கள் குடும்பங்களுடன் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து குடும்பத்துடன் பேரணி
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து குடும்பத்துடன் பேரணி
இந்தப் பேரணியில் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணி ஆனது கோவை அண்ணாசாலையில் ஆரம்பித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. பேரணியில் ஈடுபட்டவர்கள் தங்கள் கைகளில் தேசியக்கொடிகளை ஏந்தியும் தீயசக்திகளின் வடிவம் உடைய முகமூடிகளை அணிந்தும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு வந்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் உமர், ' மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும். இதனை தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக ஒரு அமைச்சரவையைக் கூட்டி இந்தச் சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று கூற வேண்டும் ' என்றும் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து பேரணி

மேலும் ' இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமிய மக்கள் பாரபட்சமாக நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு சட்டம் என்றால் அது அனைத்து மக்களுக்கும் சமமாக இருக்க வேண்டும். இவ்வாறு பாரபட்சம் காட்டும் விதமாக இருக்கக் கூடாது' என்றும் கண்டனம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடியுரிமைத் திருத்த சட்டம் வேண்டும் - ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் வழக்கறிஞர்கள்

Intro:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் குடும்பத்துடன் பேரணி

Body:மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக பல அமைப்பினர் தங்கள் குடும்பங்களுடன் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.

இந்தப் பேரணியில் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணி ஆனது கோவை அண்ணாசாலையில் ஆரம்பித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. பேரணியில் ஈடுபட்டவர்கள் தங்கள் கைகளில் 20 மீட்டர் நீளமுள்ள தேசியக்கொடியினை ஏந்தியவாறும் கைகளில் சிறிய தேசியக்கொடிகளை ஏந்தியவாறு முகங்களில் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தீய சக்திகளின் வடிவம் உடைய முகமூடிகளை அறிந்த வரும் மத்திய அரசை கண்டித்து திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி முழக்கங்களை எழுப்பியவாறு வந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் உமர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றும் இந்த மசோதா அவனது பாராளுமன்றத்தில் உள்ள எம்பிக்கள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் இதனை தமிழக முதலமைச்சர் உடனடியாக ஒரு அமைச்சரவையை கூட்டி பாராளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்ற மாட்டோம் என்று கூற வேண்டும் என்றும் கூறினார் இந்த சட்ட திருத்த மசோதாவால் முஸ்லிம் மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது என்று தெரிவித்தார். மேலும் ஒரு சட்டம் என்றால் அது அனைத்து மக்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும் இவ்வாறு பாரபட்சம் காட்டும் விதமாக இருக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.