கோவை: காந்திபார்க் சுக்ரவார்பேட்டை பகுதியில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை ஆக்கிரமித்து தனியார் உணவகம் செயல்பட்டு வந்தது.
கோயில் நிலம் ஆக்கிரமி்பு செய்யப்பட்டு இருப்பதாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த உணவகம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயலட்சுமி தலைமையில், தெற்கு தாசில்தார் முன்னிலையில் இடிக்கப்பட்டு அந்த இடம் மீட்கப்பட்டது.
இதையும் படிங்க: ’கோயில் நிலங்கள் குறித்த விசாரணைக்கு தனி தீர்ப்பாயம்’ - தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு