கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதில் ஆனைமலை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய தாலுக்காவிற்கு உட்பட்ட மாணவர்கள் படித்து பயன்பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ஐந்து பாடப்பிரிவுகள் மட்டும் செயல்படுத்தபட்டு, ஒவ்வொரு ஆண்டும் 600 மாணவர்கள் மட்டும் படிக்க அனுமதிக்கப்படுகின்றன. இதனால், ஏழை எளிய மாணவர்கள் தனியார் கல்லூரி அல்லது உடுமலை, கோவையிலுள்ள அரசு கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், தாங்கள் படிக்க விரும்பும் பாடம் கல்லூரியில் இல்லாததால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகவே, உடனடியாக நடப்பாண்டிலேயே மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து, கூடுதல் பாடப்பிரிவுகளை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி முரசொலி மன்ற தலைவர் மணிமாறன், துணை ஆட்சியர் வைத்தியநாதனிடம் மனு அளித்தார்.