அஜினோமோட்டோ நிறுவனம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பானங்களை தயாரித்து சந்தைப்படுத்திவருகிறது. சுமார் 27 நாடுகளில் தனது பொருள்களை விற்பனை செய்துவரும் இந்நிறுவனம், இந்தியாவிலும் தனது விற்பனையைத் தொடர்ந்துவருகிறது.
இந்த நிறுவனம் மோனோசோடியம், குளுட்டோமேட் என்ற வகை உப்பை அஜினோமோட்டோ என்ற பெயரில் விற்பனை செய்துவருகிறது. இதை பயன்படுத்துவதால், உடலுக்குத் தீங்கு என பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளனர்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜினோமோட்டோ இந்திய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அட்சுஷி மிஷுகு, அஜினோமோட்டோ எம்.எஸ்.ஜி. கரும்பு, மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது உணவு பாதுகாப்புத் துறையின் சான்றிதழ் பெற்ற தரமான உணவு. அதனால், மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்தார்.