கோவை மாவட்டம் பெள்ளாச்சி, ரமபட்டினம், மண்ணூர், வடுகபாளையம் ஆகிய பகுதிகளில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
துணைபோகும் அதிமுக
அப்போது அவர், "அன்றாடம் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர் விலையை விண்ணைத் தொடும் அளவுக்கு பாஜக அரசு ஏற்றிவருகிறது. பாஜகவிற்கு அதிமுக அரசு துணையாகச் செயல்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
கூட்டத்திற்குத் தடை
வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்று, திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராவது உறுதி. அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் கிராம சபைக் கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றுவருகிறது. இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்துக்கு அதிமுக அரசு எத்தனை தடைகள் விதித்தாலும் தீப்பந்தம் ஏற்றியாவது நடத்தப்படும்" என்றார்.
இந்நிகழ்வில், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மாநில விவசாய அணி துணைத் தலைவர் தமிழ்மணி, மாநில நெசவாளர் அணி துணைத் தலைவர் நாகராஜ், நகரத் தலைவர் வரதராஜ், வடுகை பழனிச்சாமி, கார்த்திகேயன், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கிராம சபைக்கு வந்தவர்களுக்கு ரூ.500 - முண்டியடிக்கும் மக்கள் வைரல் வீடியோ!