கோவை: அவினாசி சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் பெட்ரோலிய ஆயில் விற்பனை விநியோகஸ்தர்கள் (இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹெச்.பி.சி.எல்.) சங்கம் சார்பில் மாவட்டத்தில் பெட்ரோல் விற்பனை சப்ளைக்கான விநியோகஸ்தர் தேர்வுக்கான குலுக்கல் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதில் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கலந்துகொள்ள அவருக்கு அழைப்புவிடுக்கப்பட்ட நிலையில் இன்று (ஜூலை 13) அந்த நிகழ்விற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நிறுவனங்களின் அலுவலர்கள் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்பி
ஒரு மணி நேரம் காத்திருந்தும் அலுவலர்கள் வராததால் இந்நிகழ்வு கண்துடைப்புக்காக நடைபெறுவதாகவும், மக்களவை உறுப்பினர் அவமதிப்பதாகவும் கூறி பி.ஆர். நடராஜன் அங்கிருந்த நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்த சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: விலையில்லா 2 ஜிபி டேட்டா திட்டம் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை