கோயம்புத்தூர்: கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ளது சாலக்குடி அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. இங்கு தென்னிந்திய பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவது வழக்கம். இது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதாலும், வனவிலங்குகள் நடமாட்டம் நிறைந்த பகுதி என்பதாலும் கேரள வனத்துறையினர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் வனப் பகுதியை விட்டு வெளியே வந்த ஒற்றை கடமான், அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலின் முன்பு உணவுக்காக காத்திருக்கும் காட்சிகள் மனதை உருக்குபவையாக உள்ளது. மேலும் இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பட்டாசுகளை தின்ற எருமைக்கு வாய் சேதம்