பொள்ளாச்சி அடுத்து உள்ள ஆழியார் சோதனைச் சாவடியில் வன மரபியில் ஆராய்ச்சி மையம், இரண்டரை ஏக்கர் பரப்பளவில் மூலிகைப் பண்ணையைப் பராமரித்து வருகின்றனர். பண்ணையின் முக்கிய அம்சமாக மூலிகை நாற்றுகள் வெறும் ரூ. 10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு, மூலிகைச் செடிகளான ஆடாதோடா, கரு ஊமத்தை, குப்பை மேனி, கீழா நெல்லி என 300க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் வைத்துள்ளனர்.
மேலும் தென்னை, வாழை, செம்பருத்தி எனப் பல்வேறு தாவரங்கள், நாட்டு வகைச் சார்ந்த செடிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. பார்வையாளர்கள் காட்சிக்காக 18 சித்தர்கள் கூறிய மருத்துவக் குறிப்புகளையும் வைத்துள்ளனர்.
இதுகுறித்து வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில்," வன மரபியல் ஆராய்ச்சி மையம் மூலிகைப் பண்ணையைப் பராமரித்து வருவதாகவும், பண்ணையில் பல்வேறு பட்ட தாவரங்கள், 300க்கும் மேற்பட்ட மருத்துவக் குணம் கொண்ட மூலிகைகள் வளர்க்கப்பட்டு ரூ.10க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகளைக் கவர மூலிகைப் பண்ணையை அழகுபடுத்த முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜப்பானில் போதி மரக்கன்று நட்ட ராம்நாத் கோவிந்த்!